பரங்கிப்பேட்டை அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரை காணவில்லை.


சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரை காணவில்லை.
பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சி.புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராசு (50), பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்கை காரத்தெருவைச் சேர்ந்த முருகன் (42), சி.புதுப்பேட்டையைச் சேர்ந்த மதுரைவீரன் (60) ஆகிய மூவரும் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது முகத்துவாரத்தில் படகு கவிழிந்து மூவரும் நீரில் மூழ்கினர். இதில் தங்கராசு,மதுரைவீரன் ஆகிய இருவரும் நீந்தி வேறு படகில் ஏறி கரைக்கு வந்தனர். நீரில் மூழ்கிய மீனவர் முருகனை காணவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போன மீனவர் முருகனை வேறு படகுகளில் சென்று அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...