வாலிபர் கடத்தல் விவகாரத்தில் பெண் உள்பட 7 பேர் கைது
இவருக்கு ஒரு பெண்ணுடன் செல்பேசி வழியாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி அந்தப் பெண், அவரை வேலம்மாள் கல்லூரி பகுதிக்கு வரச் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து ராகுல் சிங் இரு சக்கர


வாலிபர் கடத்தல் விவகாரத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் தனபத் சிங் என்பவரின் மகன் ராகுல் சிங். இவர் மதுரை லட்சுமிபுரம் பகுதியில் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
அண்மையில் இவருக்கு ஒரு பெண்ணுடன் செல்பேசி வழியாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி அந்தப் பெண், அவரை வேலம்மாள் கல்லூரி பகுதிக்கு வரச் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து ராகுல் சிங் இரு சக்கர வாகனத்தில் அந்த இடத்துக்குச் சென்றார். அப்போது ஒரு மர்ம கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று அந்த கும்பல் கூறியதால், இது குறித்து போலீஸில் புகார் செய்தார் தனபத் சிங். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே தனபத் சிங் போலீஸுக்குச் சென்றதால், பயந்து போன கும்பல், சிவகங்கை சாலையில் அவரை இறக்கி விட்டுவிட்டு, தப்பியோடியது.
பின்னர் போலீஸார் அந்தப் பெண்ணின் செல்பேசி எண் குறித்து விசாரித்து அறிந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடத்தல் கும்பலுடன் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு இருந்ததும், அவரைக் கடத்தி பணம் பறிக்க திட்டம் இட்டதும் தெரியவந்தது.
இதை அடுத்து அந்தப் பெண் உள்பட, மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...