டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கைது நடவடிக்கைகள் பா.ம.க-வினரை மேலும் வலுவாக்கும்: அன்புமணி ராமதாஸ்

தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் என்று பா.ம.க-வினரை சிறையில் தள்ளி அ.தி.மு.க ஆட்சி அவர்களை அடக்கப் பார்க்கிறது என கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியில் நேற்று(வியாழக்கிழமை)

News image
Updated On :5 ஜூலை 2013, 9:32 am

பா.ஜான்பிரான்சிஸ்

தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் என்று பா.ம.க-வினரை சிறையில் தள்ளி அ.தி.மு.க ஆட்சி அவர்களை அடக்கப் பார்க்கிறது என கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற விழா ஒன்றில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியில் கடந்த 04-05-2013 கட்டுமான கம்பிகள் ஏற்ற சேர்ந்த லாரி எரிக்கப்பட்ட வழக்கில் பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி(53) உட்பட 15 பேர் பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் தண்டலச்சேரியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் ரவி முன்னிலை வகித்தார். நிகழ்வில் பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொது செயலாளர்கள் ரவிராஜ், துரை.ஜெயவேலு ஆகியோர் பேசினார்கள்.

விழாவில் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாருக்கு ரூபாய் 10ஆயிரம் மற்றும் அரிசி மற்றும் பொருட்களை வழங்கி பா.ம.க இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நித்தம் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே கடந்த ஓராண்டில் வெறும் 86 பேர் மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரே மாதத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் பா.ம.க-வை சேர்ந்த 122 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததோடு 8 ஆயிரம் பா.ம.க-வினரை சிறையில் வைத்து அ.தி.மு.க ஆட்சி சந்தோஷப்பட்டது, இது போன்ற கைது நடவடிக்கைகள் பா.ம.க-வினரை மேலும் வலுவாக்குமே ஒழிய பா.ம.க-வை அ.தி.மு.க-வால் அடக்க முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில் கடந்த மே மாதம் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் மாநாட்டில் 25 லட்சம் பேர் கலந்துக் கொண்டதை கண்டு காழ்ப்புணர்ச்சியிலேயே அ.தி.மு.க இவ்வாறு செயல்படுகிறது என்றும், வன்னியர் என்றாலே அவர்களை கைது செய்த அ.தி.மு.க-விற்கு பாடம் புகட்டும் விதமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வன்னியர்களும் கட்சி பார்த்து வாக்களிக்காமல் சாதி பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.2016ஆம் ஆண்டு பா.ம.க தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு முதலாவதாக அமல்படுத்தப்படும் என்றும், அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியை போல இலவசங்களுக்கு முக்கியத்துவம் தராமல் கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு மட்டும் இலவசம் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து எல்லாபுரம் ஒன்றியம் புன்னப்பாக்கம் பகுதியில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பா.ம.க நிர்வாகி குருமூர்த்தியுின் குடும்பத்தாருக்கும் நிதி உதவியை அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.