மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை: மக்களை அப்புறப்படுத்திய போலிஸாரால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கொன்னப்பநகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு நிலம் கையக்கப் படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :10 ஜூலை 2013, 10:52 am

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கொன்னப்பநகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு நிலம் கையக்கப் படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி செல்லும் சாலையில், நிலம் எடுப்புத் துறை டிஆர்ஓ ரவிச்சந்திரன், தாசில்தார் டுரூஸ் மற்றும் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ அருண் சத்யா ஆகியோர் இன்று காலை வந்தனர். நிலத்தை அளவிட வந்த அவர்களுடன் போலீஸ் தரப்பில் தக்கலை டிஎஸ்பி காந்தி, கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீஸாரும் வந்தனர். ஆனால், பொதுமக்கள் மற்றும், புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பினர் சிலர் மறியல் செய்தனர். அவர்களுடன் அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. புறவழிச்சாலை தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அது முடிந்த பின்னர் கையகப்படுத்தலாம் என்று கூறினர். ஆனால், அதிகாரிகள் தரப்பு மறுக்கவே, மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. போலீஸார் மக்களை கைது செய்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நிலம், வீடுகள் மரங்களை அதிகாரிகள் அளவிட்டனர். இதனால் போக்குவரத்து அங்கே பெரும் பாதிப்புக்கு உள்ளானது. வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.