திருநகரில் லேப்டாப் திருட்டு..
திருநகரில் திறந்து கிடந்த வீட்டில் லேப்டாப்களை கொள்ளையடித்து விட்டு,வீட்டை பூட்டிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.


திருநகரில் திறந்து கிடந்த வீட்டில் லேப்டாப்களை கொள்ளையடித்து விட்டு,வீட்டை பூட்டிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநகர் பாலுச்சாமி தெருவை சேர்ந்தவர் மகாராஜன்(28).இவர் கணனி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகின்றார்.இவருடைய நண்பர் சபாஷ்பாண்டியன் என்பவரும் உடன் தங்கியுள்ளார்.புதன்கிழமை இரவு பணிமுடிந்து வந்த மகாராஜன் உடன் தங்கியிருக்கும் சபாஷ்பாண்டியன் தாமதமாக வருவார் என எண்ணி வீட்டை பூட்டாமல் தூங்கினாராம். இதனை நோட்டம் விட்ட கொள்ளையன் ஒருவன் வீட்டை திறந்து அங்கிருந்த இரண்டு லேப்டாப்களை திருடி சென்று விட்டார்.மேலும் கொள்ளையன் வீட்டை வெளிபுரமாக பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.உடன் தங்கியிருக்கும் சபாஷ்பாண்டியன் அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது.அப்போது தூங்கிக் கொண்டிருந்த மகாராஜனை எழுப்பிய போது லேப்டாப்கள் கொள்ளைபோனது தெரிந்தது.இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்றவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...