ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து திடீரென மாயமானார் விஜயகாந்த்
தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்தில், பல்வேறு திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மாயமானார்.


தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்தில், பல்வேறு திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மாயமானார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக வியாழக்கிழமை காலை விஜயகாந்த் வந்திருந்தார். பிறகு, திட்டமிட்படி, தோப்புச்சேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கண்வாடி மையத்தை திறந்து வைத்தார் . இதைத் தொடர்ந்து அகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்திய ஊராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகள் 8 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கினார். 51 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் குக்கர்கள் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்பிறகு சென்னையில் இருந்து செல்பேசி அழைப்பு ஒன்று வந்தது. உடனே காரில் வெளியே சென்ற விஜயகாந்த் எங்கே போனார் என்று இதுவரை தெரியவில்லை. தேமுதிகவில் இருந்து வெளியேறிய 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களை கடத்த முயற்சி செய்ததாக புகார் செய்ததின் பேரில் இவர் திடீரென காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான புகாரில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலால் அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது இந்த திடீர் முடிவினால், அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூரோலையில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, சேரன்தாங்கல் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம், பொன்னி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிறுமின் நீரடைப்பான் தொட்டி ஆகியவைகள் திட்டமிட்டபடி திறக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...