மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூரில் ரூ.14 லட்சத்துடன் மாயமான அஞ்சலக அலுவலர் கைது

திருக்கோவிலூரில், அஞ்சலகத்துக்கு சொந்தமான ரூ.14 லட்சத்துடன் மாயமான அஞ்சலக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :13 ஜூலை 2013, 8:50 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூரில், அஞ்சலகத்துக்கு சொந்தமான ரூ.14 லட்சத்துடன் மாயமான அஞ்சலக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருக்கோவிலூர்  தலைமை அஞ்சல அலுவலகத்தில் இதேப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் துணை அஞ்சல் அலுவலகங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சென்ற பத்தாம் தேதி துணை அஞ்சல் அலுவலகங்களுக்கு ரூ.16 லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றார். இதில் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தில் மட்டுமே ரூ. 2 லட்சத்தை கொண்டு போய் கொடுத்துள்ளார். மீதி ரூ.14 லட்சத்தோடு இவர் திடீரென மாயமானார். அன்றைய தினம் திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் தலைமை அஞ்சல் அலுவலர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான ராஜாவைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று திருக்கோவிலூர் போலீஸார் ஊத்தங்கரை பகுதியில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 13 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.