ரூ.1000 கட்டுகளுடன் மண்டபத்தில் சில்லறை மாற்றிய நரிக்குறவர்களால் பரபரப்பு
ஓம்சக்தி திருமண மண்டபம். நேற்று இரவு நரிக்குறவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள், அந்த மண்டபத்தில் நடைபெற்ற திருமண


திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி கிராமத்தில் உள்ளது ஓம்சக்தி திருமண மண்டபம். நேற்று இரவு நரிக்குறவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள், அந்த மண்டபத்தில் நடைபெற்ற திருமண விருந்துக்குப் பிறகு மொய்ப் பணம் எழுதிக் கொண்டிருந்தவரிடம் வந்தனர். தங்களுக்கு சில்லரை வேண்டும் என்று கூறி, ரூ.1000 நோட்டை அவரிடம் கொடுத்தனர். இவ்வாறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 6க்கும் மேல் மாற்ற முயன்றதால், அவருக்கு சந்தேகம் எழுந்தது.
அருகில் இருந்தவர்கள் நரிக்குறவர்களைப் பிடித்து வைத்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கட்டுக் கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் அங்கிருந்து தப்பி ஓடினாராம். இதை அடுத்து, அவரைப் பிடிக்க சிலர் ஓடினர். ஆனால் அவர் தப்பி விட்டாராம்.
அந்த நரிக்குறவரிடம் இருந்து பெற்ற ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சிலர் கூறவே, அங்கே பரபரப்பு எழுந்தது. இதனால் கூட்டம் கூடியது. நெடுஞ்சாலையில் கூடிய கூட்டத்தால், சோதனைப் பணியிலிருந்த போலீஸார் அங்கே வந்து விசாரித்தனர்.
பின்னர் அந்த நரிக்குறவர்களை அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், ரூபாய் நோட்டையும் மண்டபத்தில் இருந்தவர்களிடம் இருந்து பெற்றுச் சென்றனர். பின்னர் சோதனையில், அவை நல்ல நோட்டுகளே என்று போலீஸார் கூறியதால், மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நரிக்குறவர்களிடம் கட்டுக் கட்டாக ரூ. 1000 பணம் எப்படி வந்தது, ஏன் அவர்கள் கல்யாண மண்டபத்துக்கு வந்தார்கள், இதில் போலீஸாருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று சந்தேகத்தைக் கிளப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...