/

சிதம்பரம்-வல்லம்படுகை புதிய தார்சாலை: சாலையோர பள்ளங்களால் தினமும் விபத்து

சிதம்பரத்திலிருந்து வல்லம்படுகை வரை நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளங்களால் தினமும் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும்

News image
Updated On :19 ஜூலை 2013, 12:44 pm

G.Sundararaj

சிதம்பரத்திலிருந்து வல்லம்படுகை வரை நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளங்களால் தினமும் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரத்திலிருந்து வல்லம்படுகை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை கிராவல் போடப்பட்டு சுமார் ஒரு அடிக்கும் மேல் சாலை உயர்த்தி தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் சுமார் ஒருஅடிக்கு பள்ளம் உள்ளதால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக இரவு நேரத்தில் இச்சாலையில் எதிரும், புதிரும் வாகனம் வரும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விடுகின்றனர். பலர் கை, கால் முறிவு ஏற்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் தார்சாலையின் இரு புறமும் கிராவல் போட்டு தார்சாலைக்கு இணையாக உயர்த்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.