/

நடராஜர் கோயிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வருகை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா காரைக்காலுக்கு சிதம்பரம் வழியாக இருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். இன்று மாலை புதுச்சேரி திரும்பிய அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு

News image
Updated On :21 ஜூலை 2013, 1:01 pm

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா இன்று மாலை வருகை தந்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா காரைக்காலுக்கு சிதம்பரம் வழியாக இருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். இன்று மாலை புதுச்சேரி திரும்பிய அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஆளுநர் வீரேந்திரகட்டாரியா மேல்சட்டையை கழற்றிவிட்டு சித்சபை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை வழிபட்டார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீபாராதனை செய்து அவருக்கு பிரசாதத்தை வழங்கி, சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவித்தனர். முன்னதாக கோயில் நுழைவாயிலில் சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.