மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூரில் வியாஸ பூஜை விழா

வேதத்தை நான்காக வகுத்துக் கொடுத்தவரும், கீதையை உள்ளடக்கிய ஐந்தாவது பேதம் எனப்படும் மகாபாரதத்தை இயற்றியவரும், பதினெட்டு புராணங்களை அருளிச் செய்தவருமான வேத வியாஸருக்கும், இடைவிடாது வரும் குரு பரம்பரைக்கும் நன்றி

News image
Updated On :22 ஜூலை 2013, 8:16 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே தபோவனத்தில் உள்ள ஸ்ரீஞானாநந்த நிகேதனில் வியாஸ பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேதத்தை நான்காக வகுத்துக் கொடுத்தவரும், கீதையை உள்ளடக்கிய ஐந்தாவது பேதம் எனப்படும் மகாபாரதத்தை இயற்றியவரும், பதினெட்டு புராணங்களை அருளிச் செய்தவருமான வேத வியாஸருக்கும், இடைவிடாது வரும் குரு பரம்பரைக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இவ்விழா நடைபெறுவது வழக்கம்.

மேலும், துறவிகள் இந்த வியாஸ பூஜை செய்த பின்னரே சாதுர் மாஸ்ய விரதம் மேற்கொண்டு, ஒரே இடத்தில் தங்கி மக்களுக்கு வேதங்களின் உள்பொருளை விளக்குவார்களாம்.

இதையடுத்து இந்தாண்டு சுவாமிகள் நித்தியானந்தகிரி முன்னிலையில் வேத விற்பன்னர்களைக் கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க வியாஸ பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது சுவாமிகள் நித்தியானந்தகிரி வேதத்தின் முக்கியத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தி அருளாசி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.