தொண்டு மனப்பான்மை கொண்ட பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதாக கூறும் தமிழக முதல்வர், இந்து மக்கள் வாய் மூடி பய உணர்வால் பீதியடைந்து, உரிமைகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற மனநிலையில் உள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொருளாதார, கல்வி, சமூக நிலைகளில் பின்தங்கிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களை கொலைகாரகளாகவும், தவறுகளுக்கு துணை போகிறவர்களாகவும் ஆக்கும் செயல் தமிழகத்தில் அதிகரி்த்து வருகிறது. எனவே தமிழகஅரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என த.தங்கவேல்நாடார் தெரிவித்துள்ளார்.