டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள்

News image
Updated On :24 ஜூலை 2013, 9:51 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு மாருதி வேனில் கடத்த இருந்த 800கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி பறிமுதல் செய்தார்.

கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திராவிற்கு சென்னையில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையின் போது மாருதி வேன் ஒன்று அதிகாரிகளை பார்த்ததும் சற்று தொலைவில் நின்றது. தொடர்ந்து அதில் இருந்த டிரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அந்த வேனை பறிமுதல் செய்து அதனை சோதித்த போது வேனில் 17 சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த காரையும் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியும் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி ஒப்படைத்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.