/

திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம்!

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் தோயில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதான நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக

News image
Updated On :25 ஜூலை 2013, 2:22 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் தோயில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அன்னதான நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சைவத்திற்கு ஆதாரம் தேவாரம். தேவாரம் உலகறிய மூலாதாரமாய் உள்ளவர் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார். உளி கொண்டு செதுக்காமல் தானாகவே தோன்றியவர் இங்குள்ள ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், ஸ்ரீசுயம்பிரகாசர் பொல்லாதவர்கட்கும் நன்மையே செய்வதால் பொல்லாப் பிள்ளையார் என்றனர். பூலோக கைலாயமான சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது.

மகாசங்கர சதுர்த்தியை முன்னிட்டு இன்று திருநாரையூரில் வீற்றுள்ள ஸ்ரீபொள்ளாப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு ஸ்ரீபெள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டிரஸ்ட் நிர்வாகி உ.வெங்கடேசதீட்சிதர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.