பின்னர் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன்,ரா.வெங்கடேசன், கோ.நடராஜன் உள்ளிட்ட திமுக நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்றக்கூடத்தை விட்டு வெளியேறினர். இதனையடுத்து குடிநீர் பிரச்சனை தீர்க்காததையும், பாலமான் ஆற்றில் நகராட்சி கழிவு நீர் கலப்பதை கண்டித்தும் மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர் ஜி.செல்வராஜ் வெளிநடப்பு செய்தார். துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது குடியிருப்பினை காலி செய்ய உத்தரவிட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் பெரு.திருவரசு வெளிநடப்பு செய்தார். பின்னர் திமுக, மூமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்றக்கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.