விருதுநகர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் அனுமதி பெற்ற பின்னரே குழந்தைகள் காப்பகங்களை நடத்த வேண்டும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
இளைஞர் நீதி, குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு திருத்த சட்டம் 2006ன் படி தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களும் பதிவு செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, ஏற்கனவே(ஆட்சியர் தலைமையில்) நடந்த கருத்தரங்கில் உரிய விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர், நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் குழந்தைகளுக்கான முழு பாதுகாப்பு வசதி இல்லாமல் இயங்கும் குழந்தைகள் காப்பகங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் இருக்கிறது. அதனால், அனைத்து தொண்டு நிறுவனங்களும் உரிய அனுமதி பெற்றுத்தான் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.