தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அம்மா இறந்த துக்கம் தாங்க முடியாமல் ரயிலில் முன் பாய்ந்து மகன் தற்கொலை முயற்சி

தூத்துக்குடியிலிருந்து-மைசூர் வரையில் செல்லும் மைசூர் விரைவு ரயில் காலை 9.30 மணிக்கு விருதுநகர் வாடியான் கேட்டுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. அப்போது, கேட்டை தாண்டி ஒருவர்

News image
Updated On :29 ஜூலை 2013, 12:27 pm

விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொள்ள முயற்சி செய்தவரை காயத்துடன் போலீஸார் மீட்டனர். இதனால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

இது தொடர்பாக விருதுநகர் ரயில்வே காவல் நிலைய போலீஸார் கூறியதாவது: தூத்துக்குடியிலிருந்து-மைசூர் வரையில் செல்லும் மைசூர் விரைவு ரயில் காலை 9.30 மணிக்கு விருதுநகர் வாடியான் கேட்டுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. அப்போது, கேட்டை தாண்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் வந்தவரை பார்த்ததும் ஓட்டுநர் நிறுத்த முயலும்போது ஓரத்தில் விழுந்த போது இடித்து தள்ளியதால் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் கீழே இறங்கி ரயில்வே காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீஸார் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி(40) என்பது தெரியவந்தது. மேலும், இவரது அம்மா கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்தது மற்றும் மனைவி பிரிந்து சென்றது போன்ற துக்கம் தாங்க முடியாமல் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும், படுகாயத்துடன் இருந்த மூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பத்தினால் தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயில் 15 நிமிடம் வரையில் நின்று தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.