டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மாணவர்களை ஆபத்தான முறையில் அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நடைபெற்ற கும்மிடிப்பூண்டி

News image
Updated On :29 ஜூலை 2013, 10:27 am

பா.ஜான்பிரான்சிஸ்

அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மாணவர்களை ஆபத்தான முறையில் அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நடைபெற்ற கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் வெ.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் கோமளா கேசவன், செயல் அலுவலர் மணிவேல் முன்னிலை வகித்தார். பதிவறை எழுத்தர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் மா.பொ.சி நகரில் மும்முனை மின்சார இணைப்பை ஏற்படுத்த கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு பேரூராட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. அதே போல கும்மிடிப்பூண்டி கெங்கன் தொட்டி பகுதியில் உள்ள சுகாதார வளாகம் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சீரமைப்பதென தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் 3வது வார்ட்டில் கால்வாய், சாலை சீரமைத்தல், பிரபு நகர் பூங்காவை புதுப்பித்தல், பாப்பன் குப்பன் சுடுகாடை சீரமைத்தல், பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் பெயர் பலகை வைத்தல், உட்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கவுன்சிலர் தீனதயாளன் பேசுகையில் கும்மிடிப்பூண்டியில் பல தனியார் பள்ளி வாகனங்களில் அளவுக்கு மீறி மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும், பல தனியார் பள்ளிகளில் பள்ளி வாகனத்திற்கு பதிலாக தனியார்கள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதாகவும், இந்த வாகனங்களில் பள்ளி வாகனம் என்று கூட பெயர் எழுதப்படாமல் அரசின் பல விதிமுறைகள் மீறப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் ஆபத்தை சுமந்தபடி பள்ளிக்கு வந்து போவதாகவும், இத்தகைய பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்வி துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையினரை கேட்டுக் கொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க போக்குவரத்து காவலர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.இதற்கு பதிலளித்த பேரூராட்சி தலைவர் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அறிவழகன், வெங்கடேசன், பாலசுப்பிரமணியம், மனோகரன், வா.ந.வடிவேலு, லட்சுமி ராஜா, வெண்ணிலா சண்முகவேல் உட்பட பலர் கலந்துக் கொண்டு பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.