தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 414 பேர் கைது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் தலைமை

News image
Updated On :30 ஜூலை 2013, 9:31 am

விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103 பெண்கள் உள்பட 414 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நகர செயலாளர் கருமலையான், எல்.பி.எப் தொழிற் சங்கத்தின் வட்டார செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களுக்கும் உறுப்பினர்களை நியமித்து உடனடியாக கூட்டத்தை நடத்த வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியங்களை அரசு சீர்குலைப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை நலவாரிய அலுவலகங்கள் மூலம் வழங்கவும் மற்றும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நலவாரியத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103 பெண்கள் உள்பட 414 பேரையும் சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், எ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு.சி, பி.எம்.சி, எல்.பி.எப் உள்ளிட்ட 6 தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.