குற்றாலம்பகுதியில் தொடர்ந்து வெயில் நிலவிய போதும்,அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான சாரல்மழை பெய்தது.ஆனால் அருவிகளில் தண்ணீர் அதிகரிக்க கூடிய அளவில் கனத்த மழை பெய்யவில்லை.இன்று காலை முதல் வெயில் நிலவியது.தொடர்ந்து பல நாட்களாக வெயில் நிலவிய போதும்,குற்றாலம் பேரருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழக்கூடிய அளவில் தண்ணீர் விழுகிறது.இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை சுமாராக இருந்தது.
நிகழாண்டில் ஐந்தருவி சுற்றுசூழல் பூங்காவில் முதன்முறையாக காய்கனி மற்றும் பழக்கண்காட்சி,மலர்கண்காட்சி நடைபெற்றது.செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்ற மலர்கண்காட்சியை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுரசித்தனர்.தென்காசி,குற்றாலம்,செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மேல்நிலைபள்ளி,உயர்நிலைபள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளும் சுற்றுலாப்பயணிகளும் திரளாக வந்து பார்வையிட்டு சென்றனர்.இதனால் சுற்றுசூழல் பூங்காவில் வாகனங்கள் நிரம்பி வழிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

