டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே பைக்குகள் மோதி வாலிபர் மரணம்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புளம்-எளாவூர் சாலையில் செங்கல்சூளைமேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஓபசமுத்திரம் பகுதியை சேர்ந்த விசு என்கிற விஸ்வநாதன்

News image
Updated On :4 ஜூன் 2013, 10:46 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புளம்-எளாவூர் சாலையில் செங்கல்சூளைமேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஓபசமுத்திரம் பகுதியை சேர்ந்த விசு என்கிற விஸ்வநாதன்(18) சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் விஸ்வநாதன். இவர் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டுபவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஓபசமுத்திரத்தில் இருந்து ஆத்துப்பாக்கத்திற்கு இவரது தாய்மாமா குப்புசாமி மகன் துரை(55) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது செங்கல்சூளைமேடு சந்திப்பில் இவரது பைக்கும் எளாவூரில் இருந்து சுண்ணாம்புகுளம் நோக்கி வந்த ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையை சேர்ந் யோசுவா என்பவரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் வாலிபர் விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த துரை மற்றும் யோசுவா பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விஸ்வநாதனின் தந்தை ஜெயபால் அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.