தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மூதாட்டி கொலை:பெண் கைது

திருநகரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் போலீசார் உறவுப்பெண்ணை திருநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :10 ஜூன் 2013, 5:39 pm

மது

திருநகரில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் போலீசார் உறவுப்பெண்ணை திருநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநகர் ஜோசப் நகரை 3 வது தெருவை சேர்ந்தவர் முத்துபிள்ளை(65) கணவரை பிரிந்து தனித்து வாழும் இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அறிகுறி காணப்பட்டது.இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில் முத்துப்பிள்ளையின் தங்கை மகள் ராஜேஸ்வரி(31) கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

கொலை குறித்து போலீசார் தெரிவிக்கையில்:கொலை செய்யப்பட்ட முத்துப்பிள்ளையின் தங்கை மகள் ராஜேஸ்வரி அப்பகுதியிலேயே குடியிருவந்துள்ளார்.ராஜேஸ்வரியின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையில் இருந்த ராஜேஸ்வரி பணம் நகைக்காக ஆசைப்பட்டு முத்துப்பிள்ளையை கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.