மீன் லாரி வீட்டில் மோதி பெண் பலி
திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை அருகே தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் கிராமத்தில் வந்தபோது, சாலையோர வீட்டுக்குள்


திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை அருகே தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் கிராமத்தில் வந்தபோது, சாலையோர வீட்டுக்குள் புகுந்தது. இதில், மகாலிங்கம் என்பவரின் மனைவி பானுமதி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...