டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற மாற்றுத் திறனாளி சிறுமி பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மகள் நிவேதா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் சென்னை அண்ணா நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் 10ஆம்


கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் பேச்சு திறனற்ற மாற்று திறனாளி சிறுமி நிவேதா(15) டிராக்டர் மோதியதில் மரணமடைந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மகள் நிவேதா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் சென்னை அண்ணா நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவரது சித்தியும் சக்கரவர்த்தி என்பவரின் மனைவியான லஷ்மி(42) என்பவருடன் பக்கத்து தெருவில் உள்ள மளிகை கடைக்கு செல்ல நிவேதா சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் முன்னால் சென்றுக் கொண்டிருந்த சைக்கிள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் நிவேதா மற்றும் அவரது சித்தி லஷ்மி் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று நிவேதா நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு மரணமடைந்தார். லஷ்மி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக நிவேதாவின் உறவினர் சங்கர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் காலனி பகுதியை சேர்ந்த விபத்துக்கு காரணமாக டிராக்டர் டிரைவரான கதிர்வேல் மகன் முருகனை(21) கும்மிடிப்பூண்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...