மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சங்கராபுரம் அருகே பெண் அடித்துக் கொலை

சங்கராபுரம் அருகே சண்டையை தட்டிக் கேட்க வந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :15 ஜூன் 2013, 6:41 am

ச.​ கார்த்​தி​கே​யன்

சங்கராபுரம் அருகே சண்டையை தட்டிக் கேட்க வந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் களியப்பெருமாள். இவரது மனைவி முனியம்மாள் (38).  இவர் வசிக்கின்ற அதேத் தெலுவில், முனியம்மாளின் தங்கை பரிமளா (34) வசித்து வருகிறார். பரிமாளாவின் கணவர் கோவிந்தன் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து பரிமளா தனது குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

பரிமளா கணவரின் தம்பியான விஜயகுமார் (25) கரும்பு வெட்டும் தொழிலாளி. நேற்று இரவு இவர் குடிபோதையில் பரிமளா வீட்டுக்கு வந்து, எனக்குச் சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு கூறி பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பரிமளாவின் அக்கா முனியம்மாள் அங்கு வந்து எதற்காக என் தங்கையிடம் பிரச்னையில் ஈடுபடுகிறாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து முனியம்மாள் வயிற்றில் பலமாக அடித்துள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே முனியம்மாள் உயிரிழந்தார்.

இது குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான விஜயகுமாரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.