கார் மோதி பைக்கில் சென்றவர் பலி
ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜயரங்கன். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் தொழிற்சாலையில் கார் ஒட்டுனராக


கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காட்டில் நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு நடைபெற்ற சாலை தொழிற்சாலையில் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்த விஜயரங்கன்(36) பரிதாபமாக பலியானார்.
ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜயரங்கன். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் தொழிற்சாலையில் கார் ஒட்டுனராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்து வரும் உயர் அதிகாரிகளை வேலை முடித்து வேற்காட்டில் உள்ள ஹைடெக் கார்பன் குடியிருப்பு பகுதியில் இறக்கி விட்டு விஜயரங்கன் அவரது பைக்கில் வீட்டிற்கு செல்ல புறப்பட்டு இருக்கிறார்.அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று விஜயரங்கன் மீது மோதியதில் விஜயரங்கன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தலைமறைவாகி உள்ள கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...