சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஸ்ரீநடராஜர் கோயில் உண்டியலில் ரூ.9லட்சத்து 25 ஆயிரத்து 631 காணிக்கை!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூன் 20-ம் தேதி வியாழக்கிழமை 22வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2013, 12:03 pm

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூன் 20-ம் தேதி வியாழக்கிழமை 22வது முறையாக உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. இதுவரை 21 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 23 ஆயிரத்து 913 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டது.

தற்போது வியாழக்கிழமை (ஜூன் 20) இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் (பொறுப்பு) கே.கிருஷ்ணகுமார்,  ஆய்வாளர் ரே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் 21-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  9 உண்டியல்களை திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும் உண்டியலில் 12 கிராம் தங்கம் மற்றும் 65 கிராம் வெள்ளி பொருள்களும், மலேசியா ரிங்கட்-445,  யு.எஸ்.ஏ டாலர்-55, ஓமன் பைசா-100,  ஆஸ்திரேலியா டாலர் 10,  இங்கிலாந்து பவுண்டு- 20  ஆகியவை இருந்தது.  உண்டியல் வைக்கப்பட்டு 4 வருடங்களில் இதுவரை 22 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.1 கோடியே, 28லட்சத்து 23 ஆயிரத்து 631 ரூபாய் கிடைத்துள்ளது என செயல்அலுவலர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.