கோபி அருகே நடந்த கொலை 2 பேர்கள் கைது
கோபி அருகே நடந்த கொலை சம்பவத்தில் உறவினர்கள் 2 பேர் கைது.


கோபி அருகே நடந்த கொலை சம்பவத்தில் உறவினர்கள் 2 பேர் கைது.
கோபியை அடுத்த கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் சீனிவாசன்(35). ரிக்லாரி தொழிலாளி. இவர் கடந்த 18 ம் தேதி இரவு கள்ளிப்பட்டி அருகேயுள்ள மூலவாய்க்கால் என்ற இடத்தில் மர்மமான முறையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுகுறித்து கோபி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் சத்தி இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் இறந்து போன சீனிவாசனின் உறவினர்கள் சிவகிரியைச் சேர்ந்த கிருஷண்மூர்த்தி(36) மற்றும் கொண்டையம் பாளையத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் அங்கக்குட்டி(36) ஆகியோர் ஒரு திருமண விழாவிற்கு கொண்டையம்பாளையம் வந்துள்ளனர்.
பிறகு 2 பேரும் குடிபோதையில் சீனிவாசனிடம் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு சீனிவாசனைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அங்கக்குட்டி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...