/

ராஜேஷ் கண்ணன்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,புலிவலம், முசிறி,துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வழிபறியில் நகைகளை திருடியதாக 2 பேரை மண்ணச்சநல்லூர் போலீஸார்ஞாயிற்றுக்கிழமை கைது செய்தும், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், முசிறி,புலிவலம், துறையூர் போன்ற பகுதிகளில் மோட்டர் சைக்கிள்கள் மற்றும் தாலி செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகளிவில் நடப்பதால், அதனை தடுக்கும் வகையில் திருச்சி போலீஸ் டிஐஜி அமல்ராஜ் உத்தரவின் பேரில் திருச்சி போலீஸ் எஸ்பி ராஜேஸ்வரி மேற்பார்வையில் ஜீயபுரம் டிஎஸ்பி தங்கவேலு(பொறுப்பு) தலைமையில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் நடேசன் உள்ளிட்ட போலீஸார் புலிவலம் அருகேயுள்ள பெரமங்கலம் விஜய் பால்பண்ணை அருகே வாகன தனிக்கை செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக வந்த அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மகன் பாபு (25), அழகியமணவாளம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் ரஞ்சித்(23) என்பதும் புலிவலம், கரட்டாம்பட்டி, மணிகண்டம், நாகமங்கலம், திருவெறும்பூர் பல்வேறு பகுதிகளில் மினி் லாரி,இரண்டு சக்கர வாகனங்களை திருடியதும், வழிபறியில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.திருடர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மற்றும் 15 பவுன் நகைகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர் மேலும் இந்த திருட்டு தொடர்பாக குளித்தலையைச் சேரந்த ஜீவா என்பவரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.     இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து  2 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.