அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: அண்ணாமலைப் பல்கலையில் நல்ல முறையில் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு விதிமுறைப்படி அனுமதி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நோக்கமாகும். அதனடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் நடத்தியது. மருத்துவப்படிப்புகளுக்கு 12,202 பேரும், பிஇ படிப்புகளுக்கு 3410 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 6766 பேரும் தேர்வெழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை 22.6.2013 அன்று பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.