மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூர் அருகே புதைக்கப்பட்ட சிறுவன் உடல் தோண்டியெடுப்பு: கிராம மக்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை

திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தில் மக்கள் முன்னிலையில் அண்மையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2013, 9:53 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தில் மக்கள் முன்னிலையில் அண்மையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கிராமத்தின் முக்கியப் பிரமுகர்ள், அதிகாரிகள் முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கபட்டு, அந்த இடத்தில் துணிப் பந்தல் அமைத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  விழுப்புரம் - முண்டியம்பாக்கத்தில் இருந்து மருத்துவக் குழு வந்திருந்து, பரிசோதனை மேற்கொண்டது. அப்போது, சிறுவனின் எலும்புகள் நொறுங்கியிருந்தன என்று பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு கூறியதாக வட்டாட்சியர் கிருஷ்ணன் கூறினார். எலும்புகள் நொறுங்கியிருந்ததால், அது விபத்து என்று தெரிவதாக அவர் கூறினார். ஆனால், பொதுமக்களோ, இரு தினங்களுக்கு முன்னர் குற்றவாளிகள் இது குறித்துக் கூறியபோது, சிறுவனின் தலை நசுங்கிவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், பிரேதப் பரிசோதனையின் போது, சிறுவனின் உடலில் தலை நன்றாக இருந்தது. ஆனால், குடல் பகுதி இல்லை கண் இல்லை; வெறும் எலும்புக் கூடாக இருந்தது என்றனர் கிராம மக்கள். இது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, திருக்கோவிலூர் அருகே எடையூரில் டிராக்டரில் பயணித்த சிறுவன் அரவிந்த், மர்மமான முறையில் உயிரிழந்தார். சிறுவனின் உடலை அவரது உறவினர்களுக்கும், போலிஸாருக்கும் தெரியாமல் காட்டில் புதைத்ததாக 2 பேர் புதன்கிழமை போலீஸில் சரணடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.