கட்டண உயர்வு: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் பங்களா முற்றுகை; கல்வீச்சு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப் பட்டதால், பொறியியல் புலம் மாணவ மாணவியர் சுமார் பத்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப் பட்டதால், பொறியியல் புலம் மாணவ மாணவியர் சுமார் பத்தாயிரம் பேர், வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட அவர்கள், பல்கலை.க்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்கலை. டீன் வேலுசாமி விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தில் திருப்தி அடையாத மாணவர்கள், பல்கலை. துணைவேந்தர் பங்களாவுக்குச் சென்றனர். அங்கே பூந்தொட்டி, பூச்செடிகள் ஆகியவற்றை சிதைத்து, கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், துணைவேந்தர் பங்களாவில் கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...