சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 33 பேர் 6-ம் நாள் நாளாக இன்று சனிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அம்மாணவர்களுடன் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 6-ம் நாளாக இன்று சனிக்கிழமை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இருப்பினும் நீதிவள்ளல், குபேரன் ஆகியோர் தலைமையில் சுமார் 39 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் பிரபு, சுப்பிரமணியசிவா, தங்கராஜ், மணிகண்டன், வசந்தராஜா, ராஜன், ராகுல், சிவராஜ், ஜெகதீசன், விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் மயக்கடைந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


