தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: கருணாநிதி எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில்

News image
Updated On :17 மார்ச் 2013, 8:02 am

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல, கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார். இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார்.

மேலும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று உறுதிபடத்  தெரிவித்தார்.

இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை   தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், அதுவும் குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது, இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.