/

வரி கட்டாததால் 150 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நகராட்சி பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குடிநீர் கட்டவில்லை. இதனால் நகராட்சி மின்காப்பாளர் ஷேக்மொய்தீன் தலைமையில் நகராட்சி பணியாளக்கள் சிதம்பரம்

News image
Updated On :20 மார்ச் 2013, 12:37 pm

G.Sundararaj

சிதம்பரம் நகரில் குடிநீர் வரி கட்டாததால் 150 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை நகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.

நகராட்சி பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குடிநீர் கட்டவில்லை. இதனால் நகராட்சி மின்காப்பாளர் ஷேக்மொய்தீன் தலைமையில் நகராட்சி பணியாளக்கள் சிதம்பரம் மெய்காவல்தெரு, கொற்றவன்குடித்தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் வரி கட்டாத சுமார் 150 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் நகராட்சியில் சொத்துவரி கட்டாவதவர்கள் வீடுகள் மற்றும் கடைகள் ஜப்தி செய்யப்படும். குடிநீர் வரி கட்டாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.