சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் பத்தரை பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

Updated On :27 மார்ச் 2013, 7:41 am

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் விரிவாக்க அலுவலர் வைத்தியலிங்கம். இவரது மனைவி மங்கையர்கரசி (55) வெளியூர் சென்று ஓமக்குளம் பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றார். அப்போது முதல் கிராஸ் ரோட்டில் மர்ம ஆசாமிகள் இருவர் வழிமறித்து தாங்கள் போலீஸார் என்றும், அப்பகுதியில் கலவரம் நடப்பதாகவும் நகைகளை பத்திரமாக எடுத்துச் செல்லவும் எனக்கூறி மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த பத்தரை பவுன் மதிப்பிலான டாலர் செயின், ஒரு செட் வளையல், 2 மோதிரங்கள் ஆகியவற்றை கழற்றி பெற்று பொட்டலமாக மடித்து கொடுத்து அனுப்பியுள்ளனர். மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று பார்த்த போது நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கற்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.