பா.ம.க தலைவர் ராமதாஸ் கைது: 2 பஸ் உடைக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது
பாமக தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை இரவு கும்மிடிப்பூண்டி அடித்த ஆரணி


பாமக தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை இரவு கும்மிடிப்பூண்டி அடித்த ஆரணி அருகே 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதில் அக்கட்சியை சேர்ந்த இருவர் ஆரணி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பாமக தலைவர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே அகரம் பகுதியில் பெரியபாளையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த இரு பேருந்துகளின் கண்ணாடிகள் மீது பைக்கில் வந்த இருவர் கற்களை எரிந்தனர்.
இந்த சம்பவத்தில் பொன்னேரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தடம் எண் 171 மற்றும் சென்னை வள்ளலார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியே பெரியபாளையம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தடம் எண் 547 ஆகியவற்றின் கண்ணாடிகள் உடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரு பேருந்துகளும் ஆரணி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. 171 பேருந்தின் டிரைவர் சுகுமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி அருகே மல்லியன்குப்பம் பகுதியை சேர்ந்த நைனார்(42), முத்து(35) ஆகியோர் புதன்கிழமை ஆரணி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மேற்கண்ட இரு அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், அவ்வழியே வந்த நோக்கியா தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கும்மிடிப்பூண்டியில்:- கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் பாமக தலைவர் ராமதாஸ் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் மா.செல்வராஜ் உட்பட 39 பேர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதலைச்சிறுத்தைகள் புகார்:- கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த 4 சுவர் விளம்பரங்களை செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் ஆயில் ஊற்றி சேதப்படுத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் சுவர் விளம்பரத்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று கூறி மாவட்ட துணை செயலாளர் ஜெமினி சிப்காட் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...