விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமதாஸ் மீது விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், இந்த வழக்கின் விசாரணைக்கு காவல் துறை தரப்பில் விசாரணை அதிகாரி ராமநாதன் ஆஜராகவில்லை. அவர் முக்கிய வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் பதில்மனு தாக்கல் செய்ய அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆயினும் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர். ஆனால் நீதிபதி கால அவகாசம் தரவில்லை.
இதனால் ராமதாஸ், ஜி.கேமணி, எம்.எல்.ஏ கணேஷ் குமார் உள்பட பாமகவினர் 463 பேருக்கு ஒரு நபர் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.
விழுப்புரத்தில் போடப்பட்ட வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பெற்றிருப்பதால், தற்போதைக்கு ராமதாஸ் சிறையிலிருந்து வெளி வரஇயலாது என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


