கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குமார்

நம்பியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

நம்பியூர் அருகே உள்ள சின்னகோசனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் நம்பியூர் இருகாலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றார். பின்னர் உறவினர்களை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.

நம்பியூர் தனியார் கியாஸ் கம்பெனி அருகில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் சுப்பிரமணி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கருக்கம்பாளையம் புதூரை சேர்ந்த பிததீப்(25) என்பவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.