/

தீயில் கருகி பள்ளி மாணவி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு சாவித்திரி (13) என்கிற மகளும், மேகநாதன் (8) என்கிற மகனும்

Updated On :6 மே 2013, 4:23 pm IST

கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தில் அடுப்பில் வெந்நீர் வைத்தபோது தீயில் கருகி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு சாவித்திரி (13) என்கிற மகளும், மேகநாதன் (8) என்கிற மகனும் உள்ளனர்.இதில், சாவித்திரி பா.வெள்ளாளபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7–வது வகுப்பும், மேகநாதன் 3–வது வகுப்பும் படித்து வந்தார். தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் 2 பேரும் வீட்டில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில், குளிப்பதற்காக ஸ்டவ் அடுப்பில் மாணவி சாவித்திரி தண்ணீரை சூடுபடுத்திக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அடுப்பில் இருந்து சிதறிய மண்எண்ணை அவர் மீது பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது.உடல் முழுவதும் பரவி தீ எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறிய சாவித்திரியின் சத்தத்தை கேட்ட பழனிச்சாமி உடனடியாக ஓடி வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை 108 ஆம்புலன்சு மூலம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.