குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஐபிஎல் 6: ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 61ல் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Updated On :12 மே 2013, 11:11 pm IST

ஐபிஎல் சீஸன் 6 போட்டி எண் 61ல் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, 17.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துவக்கத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. வரிசையாக ரஹானே, பால்க்னர், சாம்சன் என 3 விக்கெட்கள் விழுந்த நிலையில், அணி திணறியது. ஆனால், வாட்ஸன் அதிரடி காட்டினார். திராவிட் 28  பந்துகளில் 22 ரன் எடுத்தபோதும், 34 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து 70 ரன் எடுத்தார் வாட்ஸன். அவருக்கு இணையாக பின்னி 23 பந்துகளில் 41 ரன் எடுத்தார். அவர் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார். 17.1 ஓவர் இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.