பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவும், அவரது இயக்கத்தைச் சார்ந்ததலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, சாதி மோதல்களை உருவாக்குவது, வன்முறையை தூண்டுவது, அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறானது

News image
Updated On :12 மே 2013, 6:24 pm IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவும், அவரது இயக்கத்தைச் சார்ந்ததலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, சாதி மோதல்களை உருவாக்குவது, வன்முறையை தூண்டுவது, அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறானது மட்டுமின்றி தமிழகத்தில் கலவரம் ஏற்படக் கூடிய, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் தமிழக மக்கள் இரையாகி விடக் கூடாதுஎன்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தின் பொது அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட மாநில அரசு சட்டவரம்புக்குட்பட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.அதேநேரத்தில் நீதிமன்ற விசாரணையின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி யார் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைப்பது ஜனநாயக அணுகுமுறையாகாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாடாகும்.தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசினுடைய நடவடிக்கை சரியான அணுகுமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை கைவிட வேண்டுமென தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.