ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் பயணிகளை ஏற்றிசென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பேர் காய் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தேனி அருகே அரைபடிதேவன்பட்டியை சேரந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன்(25) இவர் தனது ஆட்டோவில் க.விலக்கில் இருந்து வைகை அணைக்கு ஆட்களை ஏற்றி சென்றிருக்கிறார்.இந்த ஆட்டோ குருவியம்மாள்புரம் விலக்கு அருகே அதிவேகமாக சென்றதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த வெற்றிசெல்வன்(14), இராஜ்குமார்(39), நிவேதா(12), சுவேதாலட்சுமி(15), சுதா(35),சசிகலா(18),வீரமணிமாலா(29) ஆகியோர் காயம் அடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து க.விலக்கு போலீஸார் வழக்கு பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








