பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கள்ளக்காதல் விவகாரம்: பெண் உள்பட 2 பேர் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி குண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டி மனைவி அம்பிகா (35). இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பெரியாண்டி மகன் சக்திவேல் (22) என்பவருடன் அம்பிகாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது

Updated On :12 மே 2013, 3:07 pm IST

அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி குண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டி மனைவி அம்பிகா (35). இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பெரியாண்டி மகன் சக்திவேல் (22) என்பவருடன் அம்பிகாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம் ஊரில் தெரிந்த காரணத்தால் அம்பிகா அவ்வூரில் உள்ள விவசாயி கோபால் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாராம். அம்பிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்த இளைஞர் சக்திவேல், அவ்வூரைச் சேர்ந்த விவசாயி முனுசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கிராம மக்களுக்கு இன்று காலை 7 மணியளவில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் அ.இளங்கோ அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சடலங்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இளைஞர் சக்திவேல், அம்பிகா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து சடலங்களை கிணற்றில் வீசியும், தூக்கிட்ட நிலையில் மாமரத்தில் கட்டி வைத்துள்ளனரா என்பது குறித்து அரூர் காவல் ஆய்வாளர் என். சென்னகேசவன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.