சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
சிதம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ஒருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்.


சிதம்பரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ஒருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் காவல் சரகம் வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம்பரிதி (32). இவர் மீது பஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது. இளம்பரிதி கடந்த மே 7-ம் தேதி புதுச்சத்திரம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுசாமியை அரிவாளால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த இளம்பரிதியை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா கோப்புகளை கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் இளம்பரிதியை ஓராண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...