தமிழக முதல்வரின் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெறுவதில் சிரமம் இருந்தால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழக அரசின் 2013- 14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி கூட்டுறவு பண்டக சாலை, பொதட்டூர்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மற்றும் பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் ஒரு கிலோ தரமான அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் அரிசி கிடைப்பதில் சிரமம் ஏதும் ஏற்பட்டால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


