நடப்பு ஆண்டு முதல் 9-ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை செயல்படுத்துவது குறித்து தலைமையாசிரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சி வருகிற 18-ம் தேதி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட இருக்கிறது.
தமிழகம் முழுவதும் நிகழாண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான முப்பருவ கல்வி முறையை 9-வது வகுப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது.இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு வருகிற 18-ம் தேதி ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. அதேபோல், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு இந்து மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற இருக்கிறது. எனவே இப்பயிற்சியில் தலைமையாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் வழிகாட்டு நெறிமுறை பயிற்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

திருச்சியில் அதிகரிக்கும் வெப்பம்: அரசு மருத்துமனையில் சிறப்பு வாா்டு
பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

