விருதுநகர் அருகே வெடிமருந்து பொருள்களை அரசு அனுமதியின்றி அதிகளவு இருப்பு வைத்திருந்த குடோனுக்கு சீல் வைத்து ஒருவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுதிகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு ஆலைகளில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக ஒவ்வொரு ஆலையிலும் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இதற்கு குடோன்களில் இருந்து தாரளமாக வெடிமருந்து வழங்கப்படுவதுதான் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னார்கோட்டை, மேலகோட்டூர், சின்னையாபுரம் உள்ளிட்ட வெடிமருந்து குடோன்களில் இருந்து தாரளமாக வழங்கப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
இதுபோன்ற காரணங்களால் தான் வெடிவிபத்துக்கள் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வச்சக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வெடிமருந்து குடோன்களில் திடீர் சோதனையிட்டனர். அப்போது சின்னையாபுரத்தில் ரூல்ஸ்வெல்ட் என்பவர் நடத்தி வரும் வெடிமருந்து குடோன்களில் அரசு அனுமதியின்றி அதிகளவு பொருள்கள் இருப்பு வைத்திருந்தது ஆய்வின் போது தெரியவந்தது. உடனே அந்த குடோனுக்கு வருவாய்த்துறையினர் சீல்வைத்து நடவடிக்கை எடுத்தனர். அதேபோல், வச்சக்காரப்பட்டி போலீஸார் ரூல்ஸ்வெல்ட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.