மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி 22வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலிருந்து மே 19-ம் தேதி காலை எனது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதி ஊர்திப்பயணமாக புறப்பட்டு காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், கடலூர், விழுப்புரம, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் வழியாக ஶ்ரீபெரும்புதூரை மே 22-ம் தேதி சென்றடைகிறது. அங்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் ஜோதியை பெற்றுக் கொள்கின்றனர். ஊர்திப் பயணத்தின் போது மத்தியஅரசின் சாதனைகளை விளக்கியும், இலங்கை தமிழர்களுக்கு மத்தியஅரசு செய்த உதவிகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோக்கப்படும் என கே.ஐ.மணிரத்தினம் தெரிவித்தார். கூட்டத்தில் கட்டாரி சந்திரசேகரன், மகளிரணி ராஜலட்சுமி, சிவசக்திராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.