டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :20 மே 2013, 5:23 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிடபாலு கடந்த 15-ந்தேதி மர்ம கும்பலால் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

தி.மு.க உட்கட்சி பூசலால் இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸôர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கன்னிகைப்பேரை சேர்ந்த  திருவள்ளூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டிலும், அவரது உறவினர்களான செந்தமிழ்அரசு, தென்னரசு, ஜொள்ளு (எ) தமிழரசு, தமிழரசு ஆகிóயோரும் எழும்பூர் கோர்ட்டிலும் 2 நாட்களுக்கு முன்பு சரண் அடைந்தனர்

இந்த நிலையில் கன்னிகைப்பேர் பெரியகாலணி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது23), மாதா கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (24) அகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் அருகே வடமதுரையில் இருந்து திருவள்ளூருக்கு பேருந்தில் தப்பி செல்ல முயன்றபோது பெரியபாளையம் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்கள் இருவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலுவை கொலை செய்ய ஆயுதங்கள் தயாரித்து தருவதில் உடந்தை இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இவர்கள் கோராட்டில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை செய்யப்பட்டதன் பின்னனி என்ன என்பதையும்,யார் கொலை செய்தார்கள் என்பதையும் போலீஸôர் விசாரணைக்கு பிறகே உறுதி செய்வார்கள் என்பதால் இந்த கொலை சம்பவத்தின் பரபரப்பு இன்னும் கன்னிகைப்பேர் பகுதியை விட்டு அகலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.